ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை மற்றும் கும்பகோணம் வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில், மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.கும்பகோணம் மாநகர் மகாமகக் குளக்கரையில் தொடங்கிய பேரணியை, கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி இரா. ஷர்மு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிராக நடைபெறும் விழிப்புணர்வுப் பேரணியைப் பாராட்டி அவர் சிறப்புரையாற்றினார்.மகாமகக் குளக்கரையில் இருந்து புறப்பட்ட பேரணி, காமராஜர் சாலை வழியாகச் சென்று பழைய மீன் மார்க்கெட் பகுதியில் நிறைவடைந்தது.இதில் ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு, மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.செய்தியாளர் அ.மகேஷ்
