Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
    தமிழ்நாடு

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

    adminBy adminDecember 28, 2023Updated:January 16, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் எளியவருக்கு அதிகம்உதவிகளைச் செய்து வந்தவர். தனது விடாமுயற்சியின் காரணமாக திரைத்துறையில் படிப்படியாக வளர்ச்சி கண்டவர். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தமிழ்த் துறையில் வழங்கிய அற்புதமான கலைஞர்.

    தமிழில் மட்டுமே 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் மிகச் சிறப்பாக பணி செய்தவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவர் மூப்பனார் ஆகியோருடன் நெருங்கிய நட்பு பேணியவர்.

    அரசியலில் தடம் பதித்து 1996ல் சட்டமன்ற உறுப்பினரானார். கட்சி ஆரம்பித்த ஆறு ஆண்டுகளில் 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக பெரும் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஏற்றம் பெற்றார். சக சட்டமன்ற உறுப்பினராக என்னுடன் அன்பாகப் பழகியவர்.

    அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் துணிச்சலான பல முடிவுகளை முன்னெடுத்தவர். கேப்டன் என்று அனைத்து தரப்பினராலும் அன்பாகஅழைக்கப்பட்டவர். தமிழ் திரையுலகத்திற்கும் தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கும் அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. மனிதநேயமிக்க செயற்பாட்டாளர் திரு விஜயகாந்த் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Post Views: 196
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    அம்மாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கம் வெற்றி கொடி கட்டும் ஆர். மனோகரன்……

    March 28, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.