Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    இந்தியா

    கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    adminBy adminFebruary 1, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 14.01.2024 IND-TN-15-MM-4636 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் விசைப்படகில் சமையல் பணிக்காகச் சென்ற கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், தேங்காய்ப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த A.ஜலாலுதீன் (வயது 38) த/பெ அபுபக்கர் என்பவர் கடந்த 21.01.2024 அன்று காலை 5.30 மணியளவில் கன்னியாகுமரி கடலில் இருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் ஆழ்கடலில் விசைப்படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள A.ஜலாலுதீன் என்பவரது குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Post Views: 493
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.