BREAKINGNEWS || பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பு
நாடாளுமன்ற கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் முக்கியம்.
இந்தியா மிகப்பெரிய உயரங்களை அடைந்து வருகிறது.
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணுக்கு சென்றுள்ளது.
விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது.
இளைஞர்களால் உருவாக்கப்படும் ஸ்டார்ட் அப்கள் சாதனைகளை படைக்கின்றன.
விக்ரம் 1 ராக்கெட் திட்டம் வெற்றி இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமை.
இந்தியாவின் 3வது செமிகண்டக்டர் ஆலை மிகப்பெரியதாக அமைய உள்ளது.
உலகிலேயே சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
இது இந்தியாவில் இளைஞர்களுக்கான காலம்; 56 வயது இளைஞர் என கூறிக் கொள்பவருக்கானது இல்லை – ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி கிண்டல்
28 வயதே ஆன இளைஞர்கள் இணைந்து தனியார் ராக்கெட்டை ஏவியுள்ளனர்.
இலக்குகளை அடைவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய காலம்.
- நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திரமோடி செய்தியாளர்கள் சந்திப்பு

