நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்கதாக பாரத சாரணர் இயக்கம் பல்வேறு செயல் திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் திருச்சி மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்ற சாரணர் இயக்கத்தின் 75வது ஆண்டு விழா நிறைவு பெருந்திரள் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜோஸ்வா சாம்துரை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் ஜாகின் ஜோகித் பால் ஆகியோருக்கு மூன்று வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பொறுப்பாசிரியர்களாக மாணவர்களை அழைத்துச் சென்ற ஆபிரகாம் இம்மானுவேல் மற்றும் ஸ்டீபன் பிரேம்குமார் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
Related Posts
Add A Comment


