Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் துவக்க விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் துவக்க விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை காலத்தில் மாணவர்கள் தங்களது கால்பந்து விளையாட்டு திறமைகளை மேம்படுத்திக்கொள்வதற்காக இலவச கால்பந்து பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது. மூத்த கால்பந்து பயிற்சியாளர் நசரேயன் தலைமை தாங்கினார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். தேசிய மாணவர் படை முன்னாள் அலுவலர் ஜெயசீலன் சிறப்புரை ஆற்றினார். சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த மாணவர்கள் 60 பேர் முகாமில் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முகாமில் 11 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.மே மாதம் 1ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கால்பந்து ஆர்வலர்கள் ஜாண், சியர்சன், வசந்தகுமார், தாமஸ், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை, மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Must Read