Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    June 2, 2026

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பா.ஜ.க. பெண் நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை:
    மாவட்ட செய்திகள்

    பா.ஜ.க. பெண் நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை:

    SahabudeenBy SahabudeenMay 6, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    என்ன காரணம்..?

    சரணடைந்த 3 பேர்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா (35) நடுரோட்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்த சரண்யாவை, நேற்று மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் தரப்பு கூறுகையில், “மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி சாமுவேல், சரவணன் என்ற இரு மகன்களுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் இறந்துவிட்டதால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன், என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.

    நேற்று (திங்கள் கிழமை) இரவு பாலன், தனது கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார். அதன் பின்னர் சரண்யா தனது கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் சந்துப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம்வெட்டினர். இதில், சரண்யா தலை துண்டிக்கப்பட்டதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வாட்டாத்திகோட்டை போலீஸ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதனிடையே சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சரண்யாவின் கணவர் பாலனின், முதல் மனைவியின் மகன் கபிலன் மற்றும் குகன் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்த நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு உட்பட்ட கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்பதால் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்

    பாலனின் சொத்துகளை கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில்

    தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Post Views: 181
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    June 2, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (301)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.