Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மராத்தியில் பேசு… இல்லை எனில் பணம் கிடையாது; பீட்சா டெலிவரி ஊழியரிடம் மும்பை தம்பதி அடாவடி
    உலகம் செய்திகள்

    மராத்தியில் பேசு… இல்லை எனில் பணம் கிடையாது; பீட்சா டெலிவரி ஊழியரிடம் மும்பை தம்பதி அடாவடி

    SahabudeenBy SahabudeenMay 14, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மராட்டியத்தின் மும்பை புறநகரில் உள்ள பந்தூப் என்ற பகுதியில் சாய் ராதே என்ற பெயரிலான கட்டிடத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். பீட்சா கொண்டு வந்த ஊழியர் ரோகித் லவாரே, அதனை கொடுப்பதற்காக கதவை தட்டியுள்ளார்.

    உள்ளே இருந்த பெண், இரும்பு கதவின் பின்னால் இருந்து கொண்டு ஊழியரிடம், மராத்தியில் பேசு. அப்போதுதான் பணம் கிடைக்கும் என்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த, பீட்சா டெலிவரி செய்ய வந்த ஊழியர் லவாரே, மராத்தியில் பேச வேண்டும் என்பது கட்டாயமா? ஆனால் ஏன்? என்றார். அதற்கு அந்த பெண்ணோ, ஆமாம். பேசித்தான் ஆக வேண்டும் என பதிலளித்து உள்ளார். இதற்கு லவாரே, யார் இதனை கூறினார்கள் என கேட்டார்.

    இதுவே உங்களுடைய முன் நிபந்தனை என்றால், நீங்கள் ஆர்டரே செய்திருக்க கூடாது. நீங்கள் பணம் செலுத்த விரும்பவில்லை. அப்படித்தானே? என்றார். இருவருக்கு இடையேயான இந்த உரையாடலை லவாரே வீடியோவாக படம் பிடித்து உள்ளார்.

    அதற்கு அந்த பெண், நீங்கள் என்னை வீடியோ எடுக்க முடியாது. ஆனால், நான் வீடியோ எடுப்பேன் என்றார். உடனடியாக லவாரே, இது என்ன மாதிரியான கட்டாயம்? என்றார். அப்போது, அவருக்கு அருகே நின்றிருந்த ஆண், கதவை மூட முயன்றார். அப்போது லவாரே, நீங்கள் ஆர்டர் செய்த உணவு கெட்டு போய் விட்டதா? என எனக்கு காண்பியுங்கள் என்று கூறினார்.

    இந்த உரையாடலில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. பணம் வாங்காமலேயே அவர் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விசயத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி, உணவு வழங்கிய நிறுவனமே முடிவு செய்ய உள்ளது. பீட்சா ஆர்டர் செய்த பெண் ஒருவர், மராத்தியில் பேச வேண்டும் என ஊழியரை கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை முன்பே ஆர்டர் செய்யும்போது குறிப்பிட்டிருந்தால், தேவையில்லாத விசயங்கள் நடந்திருக்காது. ஊழியரின் தேவையற்ற அலைச்சலும் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

    Post Views: 278
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போர் சூழல்; வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் கொண்டாட்டம்

    March 21, 2026

    ஈரான் மீதான தாக்குதலில் அந்நாட்டு உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும்,இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.

    March 1, 2026

    புதின் வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்… வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்திய ரஷியா

    January 1, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.