இதுகுறித்து தமது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீதான துல்லிய தாக்குதலில் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார். உலகின் மிக மோசமான மனிதர் உயிரிழந்துஉள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான் உயர் மட்ட தலைவரான ஆயதுல்லா காமேனியின் வீடு இஸ்ரேல் தாக்குதலில் தரை மட்டமானதுஎன்றும், காமேனியின் மருமகன், மருமகள், ராணுவத்தின் உயரதிகாரிகள், அணு ஆயுத திட்ட உயரதிகாரிகள் உயிரிழந்து விட்டதாக கூறினார்.
உயர்மட்ட தலைவரான காமேனி உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்றும், காமேனி உயிரிழந்து விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இதனை ஈரான் அரசு தரப்பு மறுத்துள்ளது.
அந்நாட்டு அரசு சார் செய்தி நிறுவனங்களான தஸ்னிம் மற்றும் மெஹர் இதனை மறுத்துள்ளன.
காமேனி நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும், போரில் எதிரிகளுக்கு எதிரான நாட்டை வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளன


