Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » போர் சூழல்; வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் கொண்டாட்டம்
    உலகம் செய்திகள்

    போர் சூழல்; வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் கொண்டாட்டம்

    SahabudeenBy SahabudeenMarch 21, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ‘ரமலான்’ அல்லது ‘ரம்ஜான்’ மாதம், இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனிதநூலான திருக்குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது.

    ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். இந்த மாதத்தின் இறுதியில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ‘ஈத் அல்-பித்ர்’ (Eid al-Fitr) எனப்படும் ‘ரம்ஜான்’ பண்டிகை கெண்டாடபடுகிறது

    இதன்படி, வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    :

    பிறை தெரிவதில் உள்ள மாறுபாடு காரணமாக இந்தியா, மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 28– ந்தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து வளைகுடாஉள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் க்குதல் நடத்தி வருகிறது.அதனால் மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

    இந்த சூழலுக்கு மத்தியில் இன்று வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் லட்சக்கணக்கானஇஸ்லாமியர்கள் தொழுகையை நிறைவேற்றினர்.

    லெபனான் நாட்டில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மசூதியில் ஏராளமான மக்கள் திரண்டு அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர். இதே போல் கத்தார், பஹ்ரைன்உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளிலும் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

    மேலும், போரால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த காசா மக்கள், வீதிகளில் திரண்டு ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். அதே சமயம், ஜெருசலேம் நகரில் உள்ள புகழ் பெற்ற அல்-அக்சாமசூதியில் தொழுகை நடத்துவதற்கு, பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, இஸ்ரேல் காவல்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 89
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    ஈரான் மீதான தாக்குதலில் அந்நாட்டு உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும்,இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.

    March 1, 2026

    புதின் வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்… வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்திய ரஷியா

    January 1, 2026

    நைஜீரியா: மசூதியில் குண்டுவெடிப்பு; தொழுகையில்

    December 25, 2025
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.