நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் உள்ளது.இந்த வணிக வளாகத்தில் செந்தில் ஸ்வீட்ஸ் கடையும், முத்தூட் பின்கார்ப் நிறுவனமும் இயங்கி வருகிறது.இந்த இடம் பஸ்ஸ்டாண்ட் அருகில் என்பதால் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும்.இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை கடையின் உள்ளே இருந்து கரும்புகை வந்ததால் கடை உரிமையாளர்க்கு தெரிவித்தனர்.அதே போல் பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்
தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை அதிகாரி ஜான்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை அணைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கும் மற்ற கடைகளுக்கும் எந்த விதமான பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரிகள் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
