நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி! உடன்குடி அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச்சென்றது
நாசரேத் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் உடன்குடி அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது.
நாசரேத் அருகே உள்ள ஞானராஜ் நகரில் காமராஜ் கிரிக்கெட் கிளப் சார்பில் மறைந்த முன்னாள் ஆழ்வார் திருநகரி ஒன்றிய துணை தலைவர், ஞானராஜ் நகர் நிறுவனர், முன்னாள் மூக்குப்பீறி ஊராட்சி மன்ற தலைவர் பா. ஞானராஜின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியை எம்எஸ்பி வருமான வரி ஆலோசனை மைய இயக்குநர் பிரேம், நிவேத் ஞானராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் உடன்குடி, ஞானராஜ்நகர், மணிநகர், திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பல்வேறு ஊர் அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப்போட்டியில் உடன்குடி சிவலூர் கிரிக்கெட் அணியும், ஞானராஜ்நகர் காமராஜ் கிளப் அணியும் மோதின. இதில் உடன்குடி அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது. இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட திமுக பிரதிநிதி கலை அரசு வரவேற்றார். முன்னாள் மூக்குப்பீறி ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலையரசு, நிவேதா பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி சிவலூர் அணிக்கு ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சதிஷ்குமார், 2 வது இடத்தை பிடித்த ஞானராஜ் நகர் அணிக்கு ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக அவை தலைவரும், முன்னாள் கச்சனாவிளை ஊராட்சி மன்ற தலைவருமான கிங்ஸ்டன், 3 வது இடத்தை பிடித்த மணி நகர் திரி ஸ்டார்ஸ்
போர்ட்ஸ் கிளப் அணிக்கு முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், 4 வது இடத்தை பிடித்த திருவள்ளுவர் காலனி யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு காயல்பட்டினம் பாத்திமா மழலையர் ஆங்கில பள்ளி முதல்வர் கிப்ட்லின் விகாஷ் ஆகியோர் பரிசாக கோப்பை மற்றும் ரொக்கப்பணம் வழங்கினர். இதையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டன. இதில் மாவட்ட மதிமுக அவைத்தலைவர் ரஞ்சன், பொதுக்குழு உறுப்பினர் மோகன்சிங், முன்னாள் மூக்குப்பீறி ஊராட்சி மன்ற துணை தலைவர் தனசிங், நாசரேத் பேரூராட்சி கவுன்சிலர் சாமுவேல், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் பாலசுந்தர், ஒய்யான்குடி திமுக செயலாளர் மோசஸ் கிருபைராஜ், மூக்குப்பீறி பாபு, திமுககிளை செயலாளர் கோயில்
ராஜ், நாசரேத் மதிமுக செயலாளர் ராபர்ட், முன்னாள் வரண்டிவேல் ஊராட்சி தலைவர் கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை கலையரசி சித்ரா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஞானராஜ் நகர் காமராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
படம் விளக்கம்
நாசரேத் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி சிவலூர் அணிக்கு பரிசாக கோப்பை மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டன
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி! உடன்குடி அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச்சென்றது
Related Posts
Add A Comment

