தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கடகுளம் கிராமத்தில் உள்ள சிஎஸ்ஐ கோவிலின் அருகே டார்லிங் என்பவர் தன் கணவன் செல்வன் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். கணவர் செல்வனும் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் டார்லிங் மட்டும் தனியே இருந்துள்ளார். இவரது வீட்டு மாடி கட்டும்போது திசையன்விளை அருகே உள்ள தலைவன்விளை கிராமத்தை சேர்ந்த ஆண்டோ பிரைட் சதீஷ்குமார் என்ற 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சித்தாள் வேலைக்கு வந்து போய் உள்ளார். இவர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையிலிருந்து நேற்றுதான் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மதியம் சுமார் 02:00 மணி அளவில் ஆண்டோ பிரைட் சதீஷ்குமார் என்பவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கடகுளம் வந்துள்ளார். டார்லிங் வீட்டு மாடி கட்டிடம் கட்ட சித்தாளாக வந்திருந்த இவர் மோட்டார் சைக்கிளை சி எஸ் ஐ கோவிலின் பக்கம் நிறுத்திவிட்டு கால்நடையாக டார்லிங் வீட்டிற்கு சென்று உள்ளார். டார்லிங் வீட்டு திண்ணையில் இருந்து போன் செய்து கொண்டிருந்த ஆண்டோ பிரைட் சதீஷ்குமார் கதவைத் தட்டி டார்லிங் இடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். டார்லிங்கும் குடிதண்ணீர் எடுக்க வீட்டினுள் சென்றுள்ளார். ஆண்ட்ரோ பிரைட் சதீஷ்குமார் டார்லிங்கின் வீட்டு முன்னறையில் நுழைந்து டார்லிங் தண்ணீர் கொண்டு வந்த போது அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்தன் தாலிச் செயின் உட்படஜி நகைகளை அற்று எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்து கோவில் அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்கில் தப்பி ஓட முயன்றுள்ளான். நகைகளை அற்று ஓட்டம் பிடித்ததும் டார்லிங் சத்தமிட்டு அலற ஆங்காங்கு நின்ற பொது மக்கள் அன்டோ பிரைட் சதிஸ்குமாரை விரட்டி சென்றுள்ளனர். அருகாமையிலுள்ள தோட்டத்துள் புகுந்து பதுங்கி ஒழிந்திருந்த அன்டோ பிரைட் சதிஸ்குமாரை பொது மக்கள் மடக்கி பிடித்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் தட்டார்மடம் காவல்துறையினர் கடகுளம் விரைந்து டார்லிங்கிடம் விசாரித்ததுடன் அன்டோ பிரைட் சதிஸ்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்வால் கடகுளம் ஊரில் பரபரப்பு நெடுநேரம் நிலவியது.
