Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்: வியாபாரியை குத்திக்கொன்ற லிவ் இன் காதலி
    இந்தியா

    மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்: வியாபாரியை குத்திக்கொன்ற லிவ் இன் காதலி

    SahabudeenBy SahabudeenAugust 3, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அரியானா மாநிலம் குருகிராம் பலியாவாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ் (வயது 40). இவர் குருகிராமில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி, விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே, ஹரிசுக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 3 பேரும் பலியாவாஸ் கிராமத்தில் வசித்து வரும் நிலையில் ஹரிஸ் குருகிராமில் வசித்து வந்தார்.

    குருகிராமில் ஹரிசுக்கு யஷ்மத் கவுர் (வயது 27) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹரிசும், யஷ்மத் கவுரும் குருகிராமில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.

    யஷ்மத் கவுருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தாலும் ஹரிஸ் அவ்வப்போது பலியாவாஸ் கிராமத்தில் உள்ள தனது மனைவியிடம் செல்போனில் பேசி வந்தார். இதை அறிந்த ஹரிசின் லிவ் இன் காதலி யஷ்மத் கவுர் கண்டித்துள்ளார். மனைவியிடம் பேசுவதை நிறுத்துமாறு ஹரிசிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஹரிஸ் தனது மனைவிடம் செல்போனில் பேசியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த லிவ் இன் காதலி யஷ்மத் கவுர், ஹரிசை மீண்டும் கண்டித்துள்ளார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த யஷ்மத் கவுர், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு ஹரிசை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஹரிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ஹரிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக யஷ்மத் கவுரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், உயிரிழந்த ஹரிசின் நண்பரான விஜய் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Post Views: 656
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.