திருச்சி காந்திமார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என பலமுறை அறிவித்து விட்டு பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட் யாருக்காக கட்டப்படுகிறது என்பதை மாவட்ட, நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்
திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யக்கூடாது – அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு. திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் 30 8 2025 சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் திருச்சி தஞ்சை ரோடு தனரத்தினம் நகர் தனியார் வலீமா ஹாலில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தலைவர் எம் கே எம் காதர் மைதீன் தலைமையேற்றார். பொருளாளர் எஸ் வி எஸ் வெங்கடாசலம் மற்றும் அவை தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ஐந்து பேர் ஆலோசகர்கள் முன்னிலையில் செயலாளர் எஸ் டி. கந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு துணைத் தலைவர்கள் 12 பேர் இணைச் செயலாளர்கள் 13 பேர் கமிட்டி உறுப்பினர்கள் 55 பேர் வருகை புரிந்து அனைவரின் முன்னிலையிலும் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்கள் முறையாக 20 8 2025 அன்று எமது கூட்டமைப்பின் கூட்டத்தின் தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் விதமாக 22 .8 .2025 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மேயர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அவர்கள் கே என் நேரு அவர்கள் திருச்சி காந்தி மார்க்கெட் ரூபாய் 50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து இங்கே தான் செயல்படும் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என்று வாக்குறுதி அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்படுகிறது. தீர்மானம் 2. கடந்த 04-08-2025 அன்று மண்டலம் 2 – உதவி ஆணையர் அவர்கள் தலைமையில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் காந்தி மார்கெட் சாலைகள் சீரமைப்பு மற்றும் சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெறவில்லை என்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் தமிழக அரசின் தலைமைக்கு இந்த பிரச்சினையை எடுத்துச் செல்வது அல்லது போராட்டம் அறிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 3. திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என்று பலமுறை அறிவித்துவிட்டு பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட் எதற்காக யாருக்காக கட்டப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சென்ற ஆட்சியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட் கட்டும்போது இதே முறையைத்தான் கடைப்பிடித்து கட்டி முடித்தவுடன் மார்க்கெட் வியாபாரிகளான எங்களை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய துடித்தார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு காந்தி மார்க்கெட் வியாபாரிகளையும் தொழிலாளர்களையும் பொதுமக்களையும் திசை திருப்பி மீண்டும் முதுகில் குத்தி துரோகம் செய்ய நினைத்தாலோ முயற்சித்தாலோ வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சரியான எதிர்வினை கிடைக்கும் என்றும், காந்தி மார்க்கெட் விஷயத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப் பின்பும் வாக்குறுதி அளித்தவிட்டு மாற்றி செயல்பட்ட அரசியல் பெருமக்களுக்கு வியாபாரிகளும் தொழிலாளர்களும் பொதுமக்களும் படைத்த இறைவனின் கருணையோடு எவ்வித பாடம் திருப்பித் தருகிறார்கள் என்பதை கடந்த 20 ஆண்டுகளாக மாறி மாறி உணர்த்தப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்து எங்களுடைய பாவத்திற்கும் சாபத்திற்கும் அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் ஆளாக வேண்டாம் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். தீர்மானம் 4: 20 நபர்கள் கொண்ட குழு ஒன்று இன்றைய கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு இந்த குழுவில் உள்ள 20 வியாபாரிகளும் இனி வரும் காலங்களில் நமது கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து செல்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டமைப்பில் நிறைவாக தலைவர் எம் கே எம் காதர் மைதீன் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் அவை தலைவர்கள் யுஎஸ். கருப்பையா ஜிபிஎம். பாலசுப்பிரமணி ஒருங்கிணைப்பாளர் வி என். கண்ணதாசன் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ் எம் டி. முகம்மது ஷபி மற்றும் ஆலோசர்கள் ஏ. தங்கராஜ் டிஏஎஸ். கலியூர் ரகுமான், எஸ்.பி. பாபு, கே ஆர். ராஜா மற்றும் ஏ எம் பி. அப்துல் ஹக்கீம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
