Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்புத்தாக்க மேம்பாட்டுப் பயிற்சி நிறைவு செய்த மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

புத்தாக்க மேம்பாட்டுப் பயிற்சி நிறைவு செய்த மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

புத்தாக்க மேம்பாட்டுப் பயிற்சி நிறைவு செய்த மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய அறிவுசார் நிறுவனம் இணைந்து நடத்தும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் சிறப்பாக பல்வேறு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அப்பயிற்சியில்,நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவர்கள் முப்பது பேர் இணைந்து ஆறு குழுக்களாக பயிற்சி பெற்று வருகின்றனர். பல்வேறு படிநிலைகளில் உள்ள பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் குணசீலராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர். பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டு திட்ட வழிகாட்டி ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்கள், சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் பயன் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த செயல் திட்டங்களை பல்வேறு பகுதிகளில் நிறைவேற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read