Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » அதிமுகவுடன் பாஜக ஆலோசனை: கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரியதாக தகவல்
    இந்தியா

    அதிமுகவுடன் பாஜக ஆலோசனை: கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரியதாக தகவல்

    SahabudeenBy SahabudeenOctober 8, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அதிமுகவுடன் பாஜக ஆலோசனை: கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரியதாக தகவல்

    அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமி​ழ​கத்​தில் அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு அரசி​யல் கட்​சி​யினர் தீவிர​மாக தயா​ராகி வரு​கின்​ற​னர். பிரச்​சா​ரங்​கள், மக்​கள் சந்​திப்​பு, பூத் கமிட்டி ஆலோ​சனை என பல கட்​சிகளும் தேர்​தலை நோக்கி பணி​யாற்றி வரு​கின்​ற​னர். கடந்த ஏப்​ரல் மாதம் அதி​முக – பாஜக கூட்​டணி உறு​தி​யானது. தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலைமை வகிப்​பார் என அமித்ஷா அறி​வித்​தார். ஏற்​கெனவே தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்த ஓ.பன்​னீர்​செல்​வம், டிடி​வி.​தினகரன் ஆகி​யோர் கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறினர். அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்த தேமு​தி​க​வும் மாநிலங்​களவை சீட் வழங்​காத​தால் கூட்​ட​ணி​யில் இருந்து வில​கியது. மேலும் பாமக​வில் உட்​கட்சி பிரச்​சினை காரண​மாக நிலை​யற்ற தன்மை உள்​ளது.

    தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியை பலப்​படுத்​தும் பணி​களை பாஜக தொடங்​கி​யுள்​ளது. கடந்த சில நாட்​களுக்கு முன் தமிழக தேர்​தல் மேலிட பொறுப்​பாள​ராக பைஜெயந்த் பாண்​டா, இணை பொறுப்​பாளர் முரளிதர் மொஹோல் ஆகி​யோரை பாஜக நியமனம் செய்​தது. பைஜெயந்த் பாண்டா இதற்கு முன் 2021-ம் ஆண்டு நடந்த அசாம் சட்​டப்​பேரவை தேர்​தல், கடந்த பிப்​ர​வரி​யில் நடை​பெற்ற டெல்லி சட்​டப்​பேரவை தேர்​தல்​களில் பாஜக சார்​பில் மேலிட பொறுப்​பாள​ராக பணி​யாற்​றிவர். இந்த இரண்டு தேர்​தல்​களி​லும் பாஜக அமோக வெற்றி பெற்​றது. தமி​ழ​கத்​தி​லும் வெற்றி வாய்ப்பை அதி​கரிக்க இவரை தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக நியமித்​துள்​ள​தாக அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

    இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் சென்னை வந்த தேர்​தல் பொறுப்​பாளர் பைஜெயந்த் பாண்​டா, மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை மேற்​கொண்​டர். நேற்று சென்னை பசுமை வழிச்​சாலை​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை பைஜெயந்த் பாண்டா மற்​றும் பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகி​யோர் சந்​தித்து ஆலோ​சனை மேற்​கொண்​டனர். நேற்று காலை 10.45 மணி முதல் 11.30 மணி வரை 45 நிமிடங்​கள் ஆலோ​சனை நடை​பெற்​றது.

    Post Views: 137
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (390)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.