நாசரேத்தில் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா:
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு நாசரேத்தில் இனிப்பு வழங்கி கொண்டாப்பட்டது.
இவ் விழாவிற்கு நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை தாங்கி கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் நகர செயலாளர் ரவி செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி தாமரைச் செல்வன், பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல், வார்டு செயலாளர்கள் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி, முன்னாள் பிரகாசபுரம் கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயசிங், பால்ராஜ், சுரேஷ், அகப்பைகுளம் ஸ்டிபன் ஞானராஜ், நகர இளைஞரணி ஜெரின், ராஜ்குமார், ஒன்றிய பிரதிநிதி ராமச்சந்திரன், சண்முகசுந்தரராஜா, சுந்தரம், சேகர், துரை, திருமணி, கண்ணன், அருண், விமல், சந்தி ராஜ், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
படவிளக்கம். நாசரேத்தில் கலைஞர் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


