நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில்
புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 கல்வி ஆண்டில் புதியதாக சேர்ந்த முதலாம் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நாசரேத் பேராலய தலைமை குருவானவர் அல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமை தாங்கி ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். அமைப்பியல் துறை தலைவர் சோபியா ஜெபர்சன் வேத பாடம் வாசித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் வர வேற்புரை நிகழ்த்தினார்.
இவ் விழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியின் தாளாளருமானமாமல்லன், முதல்வர் முனைவர் ஜெயக்குமார் மற்றும் நாசரேத் பேராலய சபை ஊழியர் ஜெசு, புதியதாக சேர்ந்த முதலாம் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கல்லூரியில் வேலை வாய்ப்பு அலுவலர் ஜான் வெஸ்லி வேலைவாய்ப்புகள் பற்றியும், எந்திர அறிவியல் துறை தலைவர் பிரபாகர் வேத சிரோன்மணி கல்லூரியின் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் குறித்தும், ஏஞ்சலின் ஸ்காலர்ஷிப் பற்றியும் , கல்லூரி பேருந்து விபரங்கள் பற்றி கல்லூரி போக்குவரத்து துறை அலுவலர் மர்காகாசிஸ் மோசஸ் ஆகியோர் பேசினர்.
இதில் விரிவுரையாளர்கள் வினோத் பிரவின் குமார், ஜெசிந் பிரவின் சிறப்பு பாடல்கள் பாடினர். குருவானவர் வனிதா ராணி புதிய மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிறைவாக கல்லூரியின் மின்னணுவியல் துறைத் தலைவர் பெனிட்டா ராஜு நன்றி கூறினார். பேராலய தலைமை குரு ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் நிறைவு ஜெபம் செய்தார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் விரிவுரையாளர் ஜான் விலிங்டன் தொகுத்து வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் கல்வி நிலைவரக்குழு செயலருமான தொழிலதிபர் அருள்ராஜா தலைமையில் முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சர் முத்துச்சந்திரசேகர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


