தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர் குமரன் தெரு, காடுவெட்டித் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தகுண மாரியம்மன் திருக்கோவிலின் 161-வது ஆண்டு மஹோற்சவ விழா இவ்வாண்டு பக்தி பரவசத்துடன் விமர்சையாக நடைபெற்று வருகிறது.விழாவை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பாள் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய அம்மன், வானவேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க திருவீதியுலா புறப்பட்டார். யாதவர் தெரு, வடக்கு எருத்துக்கார தெரு, மஞ்சக்கார தெரு, மருத்துவ தெரு, படையாச்சி தெரு, பழனியாண்டவர் தெரு, கௌதமேஸ்வரர் தெரு, மடவிளாகம் மற்றும் செக்கடி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர் மேலும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
