தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது கம்யூனிஸ்ட் தோழர் சு.வெங்கடேசனின் MP இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கான விளக்கம் அளித்துள்ளார் அதில் தேசிய கீதம் எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம்என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார் இவரின் கருத்து அருவருப்பும் அநாகரிகமும் அயோக்கியத்தனமும் நிறைந்தது ஆளும் ஆட்சிக்கு ஆதரவு நிலையை தவறான செயலை நியாயப்படுத்துவதை பிரதிபலிக்கிறது.தேசிய கீதம் என்ன நேயர் விருப்ப பாடலா?எங்கு வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒலிப்பதற்குமுந்தைய காலங்களில் தேசிய கீதம் சினிமா தியேட்டர்களில் திரைப்படம் இறுதிக் காட்சி முடிந்தவுடன் ஒலிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் அவமதிப்பு செய்ததனால் சினிமா தியேட்டர்களில் படத்தின் இறுதியில் தேசியகீதம் பாடல் நிறுத்தப்பட்டது.தேசிய கீதத்திற்கு ஒரு உன்னதம் உள்ளது. போகிற போக்கில் 20 முறை வேண்டுமானாலும் ஒலிக்கலாம் என்ற உங்களுடைய கேடுகெட்ட கருத்தை திரும்ப பெற வேண்டும். ஆளும் கட்சியை குளிர வைக்க நீங்களும் முயற்சி செய்வது அருவருப்பின் நீட்சியாகவும் அயோக்கியத்தனத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. தேசிய கீதம் இருமுறை மட்டுமல்ல 20 முறை கூட ஒலிக்கலாம் என்று கூறி நீங்கள் தேசப்பற்றாளராகவும் இரு முறை ஒலிப்பதை எதிர்ப்பவர்கள் தேசத்துக்கு விரோதமாக செயல்படுபவர்களாகவும் சித்தரிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி 41 நாட்களில் மிகப்பெரிய சாதனை செய்ததாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு அற்புதமான ஆட்சி தந்து விட்டதாகும் சித்தரிக்க முயல்வது காலத்தின் கொடுமை.கடந்த 41 நாட்களில் 200க்கு மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், ஆவண படுகொலைகள் கொலைகள் கொள்ளைகள். குதிரை பேரம். தலைமைச் செயலகமே நடிகர் விஜயின் கட்சி அலுவலகமாக செயல்படுகிறது. எண்ணற்ற ஊழல்கள் கண்ணுக்கு எதிரே தெரிந்தாலும் கண்களுக்கு கருப்பு துணி கட்டிக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுகவுக்கு துரோகம் இழைத்த கட்சிகளும் நடிகர் விஜய் ஆட்சியை ஆதரிப்பது கவர்ச்சி போதை தடுமாற்றத்தில் தமிழ்நாட்டை தள்ளாட வைக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை தமிழகமே கூர்ந்து கவனிக்கிறேன் தங்கை சுயநல அரசியலை தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் துரோகம் செய்வதை கூர்ந்து கவனிக்கிறது. விரைவில் இதற்கான பாடத்தை திமுக தலைமை புகட்டும் தமிழ்நாட்டில் மக்கள் விரும்பும் ஆட்சியாக சமூக நீதி ஆட்சியாக மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி மலரும் என்பதனை நினைவு படுத்துகிறோம் திமுக மூலம் வெற்றியைப் பெற்று விட்டு ஏதோ தனது சொந்த கட்சியின் மூலமாக வெற்றி பெற்றது போன்று அகங்கார பேச்சு ஒரு நாளும் நிலைத்து நிற்காது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் துரோக கோட்பாடுகளை கைவிட்டு மக்கள் பக்கம் நின்றால் வரும் காலங்களில் இந்த கட்சிக்கு வாழ்வு இருக்கும் இல்லை எனில் மக்களால் மூடிவிடாய் ஏற்படுத்தப்படுவீர்கள் என்பதனை தருணத்தில் பதிவு செய்து தேசிய கீதத்தை சினிமா பாடல் போன்று அவமானம் செய்த சு வெங்கடேசன் எம்பி அவர்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இக்கருத்தினை திரும்ப பெறாவிடில் தங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விரைவில் முற்றுகையிடுவோம் என இந்த அறிக்கையின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு ஜிஜி சிவா தெரிவித்திருக்கிறார்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
தேசிய கீதம் நேயர் விருப்பம் அல்ல? சு வெங்கடேசனுக்கு ஜி ஜி சிவா கண்டனம்
Related Posts
Add A Comment

