Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்அரசாணை எண் 123-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 16-ல் கும்பகோணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசாணை எண் 123-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 16-ல் கும்பகோணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கும்பகோணம் வட்டக் கிளை மாதாந்திர கூட்டம் கும்பகோணத்தில் உள்ள கோவிந்தன் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் தோழர் தங்க. வளவப்பன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆர். ராஜகோபாலன் முன்னிலை வகித்தார்.வட்டச் செயலாளர் தோழர் கி. பக்கிரிசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சி. சண்முகம், வரவேற்றார் வட்ட துணைத் தலைவர் ஆ. விஸ்வேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சௌரிராஜன், மோசஸ், கண்ணன், வட்ட துணைத் தலைவர் சேகர் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.கூட்டத்தில் சங்கத்தின் கட்டமைப்பு பணிகள், உறுப்பினர் சேர்க்கை, சங்க சேவைகள், வரவு–செலவுக் கணக்குகள், அரசு ஓய்வூதியர்களை சங்கத்தில் அதிகளவில் இணைப்பது, நிர்வாகத்தின் செயல்பாடுகள், உறுப்பினர்களின் நிறை–குறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.மேலும், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்காக அறிவித்துள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அரசாணை எண் 123, ஓய்வூதியர்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி, வரும் 16-ஆம் தேதி கும்பகோணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தொழிற்சங்க ஆசானுமான தோழர் எஸ். சுந்தரேசன் அவர்களின் 25-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரது தொழிற்சங்கப் பணிகளை நினைவுகூர்ந்தனர்.இந்தக் கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில், ஓய்வூதியர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read