கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 22ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வேளாண் அமைச்சர் ர. வினோத் அஞ்சலிகும்பகோணம், ஜூலை 17 –2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட பள்ளி தீ விபத்தில் 94 பள்ளி மாணவ, மாணவிகள் உயிரிழந்த சோகச் சம்பவத்தின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் பலியான குழந்தைகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் பாலக்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.இந்த நினைவு நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கும்பகோணம் வந்திருந்த தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் அவர்கள் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பாலக்கரையில் அமைந்துள்ள பள்ளி தீ விபத்து நினைவிடத்திற்குச் சென்று மெழுகுவத்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார் பின்னர் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளி வளாகம் முன்பு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த 94 மாணவ, மாணவிகளின் திருவுருவப் படங்கள் முன்பு மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, உயிரிழந்த மாணவ, மாணவிகளின் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, குழந்தைகளை நினைவுகூர்ந்தார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.செய்தியாளர் அ.மகேஷ்
