Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்மாட்டிறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் அராஜகம் - சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை:...

மாட்டிறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் அராஜகம் – சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

மாட்டிறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் அராஜகம் – சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.சென்னை : திருவெற்றியூர் தாங்கள் என்கிற பகுதியில் மாட்டு இறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் பாரத் இந்து முன்னனி அமைப்பை சேர்ந்த சிவாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் அராஜகத்தில் ஈடு பட்ட இச்சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.தாங்கள் என்கிற பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு இறைச்சி கடைகள் நடத்தி வருகின்றனர். மேலும் எத்தனையோ இந்துதுவ அமைப்பை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ளனர். அவர்களால் இது போன்ற பிரச்சனைகள் வரவில்லை அப்படி இருக்க திடீரென்று பாரத் இந்து முன்னனி சேர்ந்தவர்கள் இறைச்சி கடைகளை மூட சொல்லி அராஜகத்தில் ஈடு பட்டிருப்பது தான் சந்தேகம் எழுகிறது. இச்சபவத்தை சாதாரனமாக கடந்து செல்லாமல் அராஜகத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் முறையான விசாரணையை மேற் கொண்டு இந்த அராஜகத்தின் முழுமையான காரனம் என்னவென்று கண்டறிய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.வட மாநிலங்களில் பசு பாகாப்பு என்கிற அமைப்பால் மாட்டின் பெயரில் அரசியல் செய்வதுடன் முஸ்லிகள் மற்றும் தலீத்களை படு கொலைகளை செய்து வந்துள்ளனர். இது போன்று தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மாட்டின் பெயரில் கலவரத்தை துண்டி அதில் அரசியல் அதாயம் தேட முயற்சிகின்றனர் ? எனவே : அமைதி புங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் நபர்களை உளவுதுறையினர் முழுமையாக கண்கானிக்க வேண்டும்.மேலும் அராஜகத்தில் ஈடு பட்ட சிவாஜி மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து சிறைபடுத்த படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Must Read