Homeதமிழ்நாடுகோவை: பைக் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த வாலிபர் -வைரலாகும் வீடியோ

கோவை: பைக் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த வாலிபர் -வைரலாகும் வீடியோ

கோயம்புத்தூரில் சாலையில் வாலிபர் ஒருவர் பைக் ஓட்டி சென்றார். அவர் வலது கையால் பைக்கை ஓட்டிக்கொண்டு, இடது கையால் பைக் மீது லேப்டாப்பை வைத்து வேலை பார்த்து கொண்டே சென்றார். இதை கண்ட சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி நாளுக்குநாள் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். அதற்காக இப்படி ஆபத்தான முறையில் ஒரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டு, மற்றொரு கையால் லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டு செல்வது அவருக்கு மட்டுமின்றி, பிற வாகன ஓட்டிக ளுக்கும் ஆபத்தில் முடியும்.இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுத்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img