பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், பேரறிஞர் அண்ணாவின் வழியில் எதிர்வரும் சவால்களை சந்தித்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை வழங்குவோம்.
அனைத்து நிலைகளில் இருந்தும் அதிமுக தோழர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எங்களை எல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் நினைவிடத்தில் இருந்து உறுதி ஏற்கிறோம்.
அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை கடைபிடித்து நடந்திருந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வியை தந்திருக்க மாட்டார்கள்.
ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.
