Author: admin

சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும். பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது…

Read More

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு, நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணையிடுகிறேன். மேலும், மருத்துவ சிகிச்சையில் உள்ள நேச பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Read More

என்னால் குனியவோ மற்றும் காலணி கயிறை கட்டவோ முடியாமல் இருந்தேன் என அவர் கூறியுள்ளார். போபால், மத்திய பிரதேசத்தில் சிங்ராவ்லி மாவட்டத்தில், சித்ராங்கி நகரில் சப்- டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றுபவர் அஸ்வன்ராம் சிராவன். இந்நிலையில், பெண் அதிகாரி ஒருவர் இவருடைய காலணியின் கயிறை கட்டி விட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றிய புகைப்படம் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கி முதல்-மந்திரி மோகன் யாதவ் உத்தரவிட்டு உள்ளார். இதுபற்றி அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இது தீவிர கண்டனத்திற்குரியது. உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கும்படி நான் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளேன். எங்களுடைய அரசில் பெண்களுக்கான மதிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்து உள்ளார். எனினும், இந்த சம்பவம் பற்றி சிராவன் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி முழங்கால் பகுதியில்…

Read More

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (25.01.2024 முதல் 30.01.2024 வரை) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. (31.01.2024) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உறைபனி எச்சரிக்கை:- நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு/ அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான…

Read More

மோதல் தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிராக கவுகாத்தி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை’ தொடங்கினார். மார்ச் 20-ந் தேதி, மும்பையில் இந்த யாத்திரை முடிவடைகிறது. நேற்று முன்தினம் அசாம் மாநில தலைவர் கவுகாத்திக்குள் நுழைய முயன்றபோது, யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசார் வைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸ் தொண்டர்கள் உடைத்து எறிந்தனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து கூட்டத்தை தூண்டி விட்டதாக ராகுல்காந்திக்கு எதிராக கவுகாத்தி போலீசார், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், யாத்திரையின்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அசாம் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மாநில சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அசாம் மாநில…

Read More

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தர்மபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று (24.1.2024) மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்த்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு, விமல், அனுஷ்கா, ஜெனிபர் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில்…

Read More

தொழில் கல்வி படித்த பெண்கள் முஸ்லிம்கள் என அங்கீகரிக்கப்படும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் பேசினார். கவுகாத்தி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான பத்ருதீன் அஜ்மல், அசாமின் கரீம்கஞ்ச் பகுதியில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, பெண்கள் படிக்க வேண்டும். மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அறிவியல் படிப்பை தொடர வேண்டும். டாக்டராக வேண்டும். அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ, ஐ.பி.எஸ். அதிகாரியாகவோ அல்லது அசாம் போலீஸ் அதிகாரியாகவோ ஆக வேண்டும் என பேசியுள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் அவர் பேசும்போது, 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை முஸ்லிம்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும். ராமஜென்ம பூமியில் நிறுவப்படும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும். லட்சக்கணக்கான மக்கள் பஸ்களிலும், ரெயில்களிலும், விமானங்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் பயணம் மேற்கொள்வார்கள். நாம் அமைதி…

Read More

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். காயமடைந்த அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.

Read More

கவர்னர் ஆர்.என்.ரவியோடு தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- இப்போது நடைமுறையில் இருந்துவரும் கவர்னர் ஏற்பாட்டை சி.பி.ஐ(எம்) ஏற்கவில்லை. மத்திய ஆட்சியின் முகவர்களாக, மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படும் கவர்னர்கள் என்ற ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். கூட்டாட்சிக்கு விரோதமாக இருந்து வருகிறார். அப்பட்டமாக அரசியல் செய்துவரும் ஆர்.என்.ரவி அந்த பதவியில் நீடிப்பதே இழுக்கு என சி.பி.ஐ(எம்) பலமுறை கூறியுள்ளது. தொடர்ந்து அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிவருகிறது. எனவே அவருடைய தேநீர் விருந்தில் பங்கேற்பதென்ற கேள்வியே எழவில்லை. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்

Read More

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, யாத்திரையின் ஒருபகுதியாக நேற்று அம்மாநிலத்தின் தலைநகர் கவுகாத்திக்குள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கவுகாத்தி நகருக்குள் செல்லாமல் நகரின் வெளிப்புறம் வழியாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். மேலும், ராகுல்காந்தி தலைமையிலான யாத்திரை கவுகாத்தி நகருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு நகருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, யாத்திரையில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, தொண்டர்களை சிங்கங்கள் என குறிப்பிட்டு தடுப்புகளை தகர்க்கும் வலிமை நம்மிடம் உள்ளது என்றார். மேலும், நாம் தடுப்புகளை தகர்த்துள்ளோம், ஆனால் சட்டத்தை தகர்க்கவில்லை என்றார். இந்நிலையில், யாத்திரையின்போது வன்முறையை தூண்டியதாக ராகுல்காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால், கட்சி தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டுதல், பொதுச்சொத்திற்கு சேதம்…

Read More