Author: admin

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நிவாரண பணிகள், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தற்போது மழை வெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெள்ள பாதிப்பில் இருந்து திருச்செந்தூர் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 6 நாட்கள் கழித்து பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு…

Read More

சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- வட மற்றும் தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தென்மாவட்டங்களில் தூர்வாரும் பணி நடந்திருந்தால் தண்ணீர் தேங்கியிருக்காது. அரசியலில் நாகரீகம் வேண்டும்; நேற்று முளைத்த காளான் உதயநிதிக்கு வாய் துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி மாட்டிக்கொள்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பான முறையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். பக்குவம் இல்லாத ஒரு அரசியல்வாதி என்றால் அது உதயநிதிதான். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று நாகூருக்கு வருகை தந்தார். பின்னர் தர்காவினுள் சென்ற ஆளுநர் ரவி, பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், “467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழைமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று எழுதினார்.

Read More

தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவசிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்-அமைச்சர் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆ.ராசா எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Read More

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய கோரி கோரிக்கை முன்வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்து வலியுறுத்தினர். அதேவேளை, பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் போராட்டத்தை முன்னின்று நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு…

Read More

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவு வாயில் அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Read More

ராமேசுவரத்தில் இருந்து 8 நாட்களுக்கு பிறகு 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது, 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி சேதப்படுத்தியதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயல்களால் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதியிலேயே கவலையுடன் கரை திரும்பினர். படகு ஒன்றிற்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

Read More

தமிழக அரசின் வெள்ள நிவாரண அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது! நிவாரண உதவியை ரூ.15 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்!-எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கடை மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் உதவித் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மழை வெள்ளதால் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் இந்த உதவித் தொகை அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. இந்த மழை வெள்ளத்தால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, தங்களின் சிறுசிறு சேமிப்பு மூலமாக வாங்கிவைத்த இரு சக்கர வாகனங்கள், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்களையும் இழந்து தவிக்கின்றனர். புயல்-கனமழை அறிவிப்புத் தொடங்கி தற்போது வரை 10 நாட்களுக்கும்…

Read More