Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
அயோத்தி கோவிலில் ராம் லல்லாவின் கும்பாபிஷேகத்தை சாத்தியமாக்கியது சிவசேனா என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். நாசிக், நாசிக்கில் நேற்று நடந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கலந்து கொண்டு பேசியதாவது:- ராமருடன் எங்களது கட்சிக்கு மிகவும் பழமையான தொடர்பு உள்ளது. இந்த தொடர்பு ஆழ்ந்த உணர்வுப்பூர்வமானது. இது வேறு எந்த நபருக்கோ அல்லது எந்த கட்சிக்கோ இல்லை. ராமருடன் பழமையான தொடர்பு யாருக்கேனும் இருந்தால், அது சிவசேனா கட்சிக்குதான் உள்ளது. அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகம் எங்கள் கட்சியால் தான் சாத்தியம் ஆனது. சிவசேனா கட்சி மட்டும் இல்லையென்றால் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வாய்ப்பில்லை. சிவசேனாவின் தொண்டர்கள் தைரியத்துடன் அதை நடத்தி காட்டினர். அதனால்தான் பிரதமர் மோடி, அயோத்தியில் புதிய ராமரின் சிலை பிரதிஷ்டை செய்ய முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும் என கனிமொழி எம்.பி தெரிவித்து இருந்தார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, எம்எல்ஏக்கள் எழிலரசன், எழிலன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர் பேசிய கனிமொழி எம்.பி, “தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொது மக்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்க உள்ளோம். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும்.” என்றார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்கண்ட பகுதிக்கு பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு…
கட்சியில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு அறிவித்துள்ளார். விஜயவாடா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு. இவர் நரசராவ்பேட்டை மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு தனது எம்.பி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அத்துடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், “ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. கட்சியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொண்டர்களிடையே மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார். இது முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு கூடுதல் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயலுவை நரசராவ்பேட்டைக்கு பதிலாக, குண்டூர் தொகுதியில் போட்டியிடுமாறு கட்சி கூறியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் தெரிவித்தன.…
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்களின் நீண்ட நெடிய வரலாறு குற்றாலத்தோடும், கூடங்குளத்தோடும் முடிந்து போவதில்லை. தேரிக்காடுகளிலும் அதனைத் தேட வேண்டியதுள்ளது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாயும் நெல்லை மண்ணில், வறட்சியின் வரைபடமாகவே திசையன்விளை, குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகள் திகழ்கின்றன. பனை, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி… ஒரு காலத்தில் இவைதான் இந்தப் பகுதிகளின் ஜீவாதாரம். பதனீரும், நுங்கும் பண்டமாற்று முறைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் தேரிக்காடுகளை இணைத்து ஒரு ரயில் ஓடியதென்றால் நம்பவா முடிகிறது? காலச் சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தினால், கருப்பட்டிக்காகவே ஓடிய ஒரு ரயிலின் கண்ணீர்க் கதை நம்மை ஆசுவாசப்படுத்தும்… 70 ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடிய தேரிக்காட்டு ரயில், பழைய தலைமுறைக்கு மட்டுமே பரிச்சயம். 1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன. அந்த ரயிலின் பின்னணி இதுதான்… சென்னையைத் தலைமையிடமாக கொண்ட ‘பாரி அன் கோ’ நிறுவனம்…
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கவர்னர் ரவி இல்லை ஆர்.எஸ்.எஸ். ரவி; கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்-ன் ஒட்டு மொத்த குரலாக ஒலிக்கிறார். ஆர்.என்.ரவி முகத்தில் பூசாரிகள் கரியைப் பூசியுள்ளார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களை மறைக்கும் வகையில் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நடந்துள்ளது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று இந்திய மக்களை கோஷமிட வைத்துள்ளனர். அயோத்தியில் நேற்று நடைபெற்றது பொய்யை உண்மையாகவும், புராணத்தை வரலாற்றாகவும் மாற்றும் அவலம். அப்பாவி இந்து மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற ஜனநாயக மாண்புகள் சிதைக்கப்பட்டும். பாஜக புதிய பாரதம், ராம ராஜ்ஜியம் உள்ளிட்ட கொள்கைகள் பார்ப்பனிய தர்மத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி, உலக அரங்கில் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள பண மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப…
மும்பை அருகே பயணிகள் ரெயில் மோதியதில் 3 ரெயில்வே ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வசாய் ரோடு மற்றும் நைகான் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ரெயில்வே காவல்துறை (ஜிஆர்பி) அதிகாரி கூறியதாவது:- வசாய் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை சிக்னல் பாயின்ட் பழுதானதால் மேற்கு ரெயில்வேயின் சிக்னல் பிரிவு ஊழியர்கள் 3 பேர் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8.55 மணியளவில் அந்த வழியாக சர்ச்கேட் நோக்கி சென்ற பயணிகள் ரெயில், அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள், சிக்னலிங் பிரிவு தலைமை ஆய்வாளர் வசு மித்ரா, சிக்னல் பராமரிப்பாளர் சோம்நாத் உத்தம், உதவியாளர் சச்சின் வான்கடே ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.…
அயோத்தி: சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என்றும் இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்களின் மின்சுமை குறையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று பிரான் பிரதிஷ்டை சடங்குகள் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று இந்த சடங்குகளை செய்தார். கோவில் கருவறையில் கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார். இதையடுத்து பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவான இன்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட பிரபலங்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். இந்த நிலையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம்…
கடற்படை அட்டூழியம் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் 6 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி कफपीល់ ② (22.01.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 2024-2025 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் ஆகியவை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர், சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர், எ.சரவணவேல்ராஜ், நகர் மற்றும் ஊரமைப்பு துறை இயக்குனர் பா.கணேசன், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழும உறுப்பினர் செயலர் ஐ.ஜெயகுமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம் கடந்த தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பெரும்பான்மையான ஆம்னி பேருந்துகள் புகார்களுக்கு இடம் அளிக்காமல் செயல்பட்டு வந்தாலும் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வன்னம் இருந்ததால் தமிழக முழுவதிலும் कलंक 10.01.2024 प्रឆ្ងល់ 21.01.2024 வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, மாநிலம் முழுவதிலும் 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

