தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
இன்று (29 /6/ 2025 )ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 முதல் மணி 6:30 மணிவரை மாநில தலைவர் சை.மனோகரன் தலைமையில் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு முன்னிலை
ரா.ஆரோக்கியசாமி மூத்ததலைவர்
கச்சி முகைதீன்
மாநில பொதுச்செயலாளார்
வரவேற்புரை
மு.மகாராஜன்
மாநிலபொருளாளர்
நன்றியுரை
S.நாகராஜன் மாநிலநிர்வாககுழு
கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள்
திரு.மைனர் முத்து மாநிலநிர்வாககுழு
சு.மூர்த்தி மாநில பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்
சு.காசிலிங்கம் மாநில பொதுக்குழு உறுப்பினர்
வெ.வெள்ளைராஜா
மாநிலபொதுக்குழு
திரு.சபாதி மாநில பொதுக்குழு.
திருமதி தவமணி செல்வி
திரு மூக்காண்டு
மற்றும் பலர் கலந்துகொண்டணர்
கீழ்கண்ட தீர்மானம்
நிறைவேற்றம்
(1) மனித கழிவுகளை மனிதநே அகற்றம் பணியை தடை செய்ய வேண்டும் கழிவு நீர் அகற்றும் பணியில் திருச்செந்தூர் நகராட்சியில் (8/6/2025) நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுடலை மணி இறந்துள்ளார் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் தீர்மானம்
(2) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் பொது தகவல் அலுவலர்கள் அரசுத்துறை செயலாளார்கள் திருமதி
மைத்திலீ ராஜேந்திரன்
திருமதி மதுரைமீனாட்சி
அவர்களின் சுற்றிக்கையை முழுமையாக பின்பற்ற வேண்டும் இதனை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்துதல் செய்ய கூட்டத்தில் தீர்மானம்
(3) நத்தம் காலிமனை சம்பந்தமாக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் உத்தரவுகளை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா வட்டாச்சியர், கோட்டாச்சியர்,மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பின்பற்ற வேண்டும் இது சம்பந்தமாக டாக்டர் கிரிஜா வைத்தியநாதன் ஜ.ஏ.எஸ்.மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளார் சுற்றிக்கை
மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு 9466 /2023 405 ஆகியற்றின் வழிகாட்டுதலை நடைமுறைபடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
(4) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி விஜயனூர் பொது மக்கள் வாழும் பகுதியில் பொது அமைதிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் டாஸ்மார் கடையை மீண்டும் மக்கள் பகுதியில் கொண்டு வரம் முடிவை உடனடியாக கைவிட கூட்டத்தில் தீர்மானம்
( உடன்குடி சைவபிரகாச வித்யா சாலை பள்ளி) தற்போது அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுசுவரை அகற்றி 2ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றளவும் பள்ளி சுவர் கட்டாமல் காலம் தாழ்த்தும் செயலை கண்டிக்கிறோம் போர்கால அடிப்படையில் பள்ளிசுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றம்
(5) உடன்குடி அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வைத்தும் கோரிக்கையை தொடர்ந்து நிராகரிப்பதற்கு காரணம் என்ன மக்களின் அடிப்படை உரிமை மறுக்கபடுவதாக கருதுகிறோம் இதனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்

