Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி, கல்வி இணைச் செயல்பாடுகள், விளையாட்டு கராத்தே மற்றும் சிலம்பம் ஆகிவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பாக நடைமுறைப்பத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த பல்வேறு மாணவர்கள் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியில் முதல் நிலை கருமை பட்டயத்திற்கான தேர்வு, தேசிய கராத்தே பயிற்சியாளர் டென்னிசன் மாஸ்டர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டார். அதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர் அர்ஜுன், ஏழாம் வகுப்பு மாணவர் ஆதிஷ், எட்டாம் வகுப்பு மாணவர்கள் சேர்மன்,சேர்ம கெளதம் மற்றும் ஒன்பதாம் மாணவர் சுதன் கார்த்தி ஆகியோர் தேர்ச்சி பெற்று முதல் நிலை கருப்பு பட்டையம் பெற்றுள்ளனர். கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலராஜ் பட்டயச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம்,பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் பிற ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Must Read