Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி

    August 2, 2026

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home»தமிழ்நாடு»மாவட்ட செய்திகள்»ஒரே சேலையில் தூக்குப்போட்டு கொண்ட தம்பதி.. 3 குழந்தைகள் அனாதையான சோகம்
    மாவட்ட செய்திகள்

    ஒரே சேலையில் தூக்குப்போட்டு கொண்ட தம்பதி.. 3 குழந்தைகள் அனாதையான சோகம்

    SahabudeenBy SahabudeenJuly 23, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள நயினார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவருடைய மனைவி ரேவதி (32). இவர்களுக்கு ஜனனி (11) என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மகன்கள், மகள் பள்ளிக்கு சென்று இருந்தனர். அப்போது, உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்தனர். வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் ஒரே சேலையில் ஆறுமுகமும், ரேவதியும் தூக்கில் தொங்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரையும் கீழே இறக்கினர். அப்போது ரேவதி இறந்து விட்டது தெரியவந்தது. ஆறுமுகத்தை உடனே திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த திருப்புவனம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்பதகராறில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டது தெரியவந்தது.

    தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டநிலையில், அவர்களது 3 குழந்தைகள் அனாதையாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Post Views: 303
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி

    August 2, 2026

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (393)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.