திருச்சி காந்தி மார்க்கெட்டை 50கோடியில் புனரமைப்பதாக சட்டமன்றத்தில் உறுதியளித்த நிலையில்!
இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுவது ஏன்?
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு வேதனையோடு கண்டன தீர்மானம்.
அமைச்சர் ஆட்சியரை நேரடியாக சந்தித்து முறையிடுவோம் என தீர்மானம்…….
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர். எம் கே. எம். காதர் மைதீன் அவர்களின் தலைமையில் 20-0 8- 2025 அன்று வலிமா மினி ஹா லில் நடைபெற்றது. விழாவிற்கு அவைத்தலைவர்கள்யு.எஸ். கருப்பையா பி .ஜி.எம் .ஆலோசகர் ஏ எம் பி அப்துல் க்கிம் , ஏ. தங்கராஜ் எஸ்பி. பாபு ஒருங்கிணைப்பாளர் வி. என். கண்ணதாசன், எஸ் எம் டி. ஷமி முகமது, துணைத்தலைவர்கள் துணைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1. நமது திருச்சி காந்தி மார்க்கெட் சம்பந்தமாக நமது தமிழக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் இரண்டு மூன்று கூட்டங்களில் காந்தி மார்க்கெட் இங்கேயே தொடர்ந்து இயங்கும் என்பதை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர்கள், சபாநாயகர், அமைச்சர் பெருமக்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கேள்விகள் கேட்டு அதற்கு நமது நகர்ப்புற அமைச்சர் மாண்புமிகு. அமைச்சர். கே என் நேரு அவர்கள் காந்தி மார்க்கெட் 500 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்று சட்டமன்றத்திலேயே உறுதிமொழி அளித்திருக்கும் நிலையில், நமது திருச்சி மாநகராட்சி மேயர். திரு. அன்பழகன் அவர்கள் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும், இடையூறாக இருக்கிறது என்று அடிக்கடி பத்திரிகையில் பேட்டி கொடுத்து வருவதை எங்களது கூட்டமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். வியாபாரிகள் மூலம் ஆண்டுக்கு வரி மூலமும் வாடகை மூலமும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி அதன் மூலம் நிர்வாகம் நடத்தி வரும் மாநகராட்சி தொடர்ந்து எல்லாவற்றையும் மக்களையும் மேயர். அவர்கள் அச்சுறுத்தி வருவதோடு ஆளும் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் அறிக்கையை விட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தீர்மானம் 2. காந்தி மார்க்கெட் கூட்டமைப்பின் நிர்வாகிகள் விரைவில் நமது அமைச்சர் ஆட்சியர் ஆணையர் ஆகியோர்களை நேரில் சந்தித்து திருச்சி காந்தி மார்க்கெட் நிரந்தர நிலைமை மற்றும் பஞ்சபூர் புதிய காய்கறி வளாகம் யாருக்காக கட்டப்படுகிறது என்பதை குறித்து முழுமையான விளக்கம் பெற இருக்கின்றோம்.
தீர்மானம் 3. கடந்து 04 -08 -2025 அன்று திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 உதவி ஆணையர் தலைமையில் எங்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆடி 28 முடிந்து மறுநாளே சுமார் 3 கோடியே 65 லட்சம் காந்தி மார்க்கெட் முழுவதும் சாலைகள் புதுப்பித்தல் சாக்கடைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என வாக்குறுதி அளித்தார்கள். இத்தனை நாட்கள் கடந்தும் வெளியிட எவ்வித பணியும் தொடங்கவில்லை. பலமுறை இது சம்பந்தமாக புகார் அளித்தும் கேள்வி கேட்டும் எவ்வித முறையான பதிலும் இல்லை. இதையும் கண்டிப்பதோடு இரண்டு நாட்களில் பணிகளை தொடர்ந்து விரைவில் விரைவில் சுமார் மூன்று மாத காலத்திற்குள் பராமரிப்பு பணிகளை முடித்துக் கொடுத்து காந்தி மார்க்கெட் வியாபாரத்திற்கும் பொதுமக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் தொடர் சிரமத்தை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பாக நிர்வாகிகள் அனைத்து கமிட்டி உறுப்பினர்கள் திருச்சி 21-08-2025 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நன்றி உரையாக திரு எஸ்.எம்.டி கந்தன் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


