Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்பெண் தூய்மைப் பணியாளரிடம் அநாகரீகச் செயல் -ஆந்திர இளைஞர் கைது

பெண் தூய்மைப் பணியாளரிடம் அநாகரீகச் செயல் -ஆந்திர இளைஞர் கைது

சென்னை அடையாறில் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞரை பெண் தூய்மைப் பணியாளர் துடைப்பத்தால் அடித்து விரட்டினார்.

அடையாறு மேம்பாலத்தின் கீழ் நேற்று அதிகாலையில் 50 வயது மதிக்கத்தக்க தூய்மைப் பணியாளர் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் தூய்மைப் பணியாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆந்திராவைச் சேர்ந்த பச்சு சாய் தேஜா என்பவரைக் கைது செய்தனர்.

Must Read

spot_img