Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
    தமிழ்நாடு

    கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

    SahabudeenBy SahabudeenJanuary 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்புதிட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற உலகம் உங்கள் கையில் என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னைநந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் லேப் டாப்கள் வழங்கப்படுகின்றன.

    கல்வி அனைவருக்கும், உயர்வு ஒவ்வொருவருக்கும் என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த டெல், ஏ.சி.இ.ஆர். எச்.பி. போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் லேப் டாப்கள் வழங்கப்படுகின்றன.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த லேப் டாப்களில் இன்டல் ஐ-3,8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. நினைவகம், விண்டோஸ் 11 ஹோம் மற்றும் மென்பொருள்கள், எம்.எஸ்.

    ஆபீஸ் 365 என ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர லேப் டாப் பையும் வழங்கப்படுகிறது.

    டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப துறை, மென்பொருள் உருவாக்கம், தரவு உள்ளீடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வரைகலை வடிவமைப்பு, குறியிடுதல், வலை வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு கருவிகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

    இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து, கிராமநகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். உலகம் உங்கள் கையில் என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Post Views: 278
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.