Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்நாசரேத்தில் பஸ்ஸில் சிறுமியிடம் சில்மிஷம்.

நாசரேத்தில் பஸ்ஸில் சிறுமியிடம் சில்மிஷம்.

தொழிலாளி போக்சோ வழக்கில் கைது

 நாசரேத்தில்  பஸ்ஸில் சிறுமியிடம்  பாலியல் தொந்தரவு சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கோக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். நாசரேத் அருகே உள்ள வாழையடி முதல் தெருவைச்சேர்ந்தவர் வெங்கடேஷ்(29) தொழிலாளியான இவர் நேற்று முன்தினம்  நாசரேத்தில் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில்  நன்றாக மது அருந்திய நிலையில் பயணம் செய்துள்ளார். அப்போது பஸ்ஸில் பயணம் செய்த    சிறுமியிடம்  பாலியல் தொந்தரவு ஈடுபட்டதுடன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி அலறியதால்  பஸ்ஸில் பயணித்த பயணிகள் அவரை கண்டித்து  நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில்  காவல் ஆய்வாளர் சகாயசாந்தி, விசாரணை நடத்தி, வெங்கடேஷை போக்சோ வழக்கில் கைது செய்து  சிறையில் அடைத்தார்.

Must Read