Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கும்பகோணத்தில் ஆதி ஸ்ரீ சாந்தகுண மாரியம்மன் ஆலய மகோத்சவம்
    மாவட்ட செய்திகள்

    கும்பகோணத்தில் ஆதி ஸ்ரீ சாந்தகுண மாரியம்மன் ஆலய மகோத்சவம்

    SahabudeenBy SahabudeenJune 25, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அம்பாள் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர் குமரன் தெரு காடுவெட்டி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி ஸ்ரீ சாந்தகுண மாரியம்மன் திருக்கோவிலின் 161வது ஆண்டு மகோத்சவ விழா நடப்பு ஆண்டு ஆனி மாதத்தில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 19ஆம் தேதி கொடியேற்று விழா மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் தினமும் ஆதி ஸ்ரீ சாந்தகுண மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் தினமும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து திருவீதி உலா வருகிறார். அதன்படி புதன்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் அருள்மிகு ஆதி சாந்தகுண மாரியம்மன் பல்வேறு வண்ணமலர் அலங்காரத்துடன் மேளதாளங்கள் வானவேடிக்கை முழங்க வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து ஆலய அர்ச்சகர் மகாதீபாரதனை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பின், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட அம்பாள், குமரன் தெரு, திருஞானசம்பந்தர் நகர், சத்தியம் நகர், அம்மன் காலனி, பிரம்மன் கோவில் மற்றும் அரசலாறு சாலை வழியாக முக்கிய வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள், தெருவாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 108
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.