Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணம் சித்தி விநாயகர் ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் சித்தி விநாயகர் ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை வடக்கு மேலத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை ஆகம விதிகளின்படி வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு சனிக்கிழமை மாலை மங்கல இசையுடன் விழா தொடங்கி, ஸ்ரீ மங்கள விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், தேவதா அனுக்ஞை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், பிம்ப சுத்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது பின்னர்ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யாகசாலை பூஜைகள், வேத பாராயணங்கள் மற்றும் பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புனித கலசங்களில் பூஜிக்கப்பட்ட தீர்த்தம் கோபுர கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வேத மந்திரங்கள், மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கைகள் முழங்க ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மூலவருக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் பின்னர் அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் பரம்பரை அறங்காவலர் ஜி, ஜெயபால் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read