சிறை கைதி சபரிவர்மனின் மரணத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .மேலுமசிறைக்குள் சபரிவர்மனின் உடலில்19 இடங்களில் காயம் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சிறைக்குள் கைதிகளை பாதுகாக்க கூடிய சிறை காவலர்களே கைதி சபரிவர்மன் உடல் ஊன முற்றோர் என்றும் பார்க்காமல் இவ்வுறக்கமின்றி மிகவும் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த சிறைகாவலர்களின் இத்தகை செயலை கண்டிக்கிறோம். சபரிவர்மனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் சபரிவர்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ 50 லட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.மேலும் . சபரிவர்மன் மரணத்திற்கு காரணமான மூன்று சிறைக்காவலர்களை மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் கைது செய்திருப்பது வரவேற்க்க தக்கது. மேலும் .சாத்தான் குளம் . பென்னீக்ஸ் ஜெயராஜ். திருப்புவனம். அஜீத் குமார் மரணத்திலும் சம்பந்த பட்ட காவல் துறையினயினர் இன்னும் சிறைகளில் உள்ளனர் . என்பதை கூட உணராமல் மீண்டும் அது போன்று கொடூர சம்பவத்தை காவல் துறையினர் நிகழ்த்திருப்பது அராஜக போக்காக தான் பார்க்க முடிகிறது.எனவே : சபரிவர்மன் மரணத்தில் யார் காரமானவர்கள் என்று துரித விசாரணை மேற் கொள்ள வேண்டும் .இனி வரும் காலங்களில் காவல் மரணங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
