Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 22ஆம் ஆண்டு நினைவு தினத்தில் திமுகவினர் மௌன அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 22ஆம் ஆண்டு நினைவு தினத்தில் திமுகவினர் மௌன அஞ்சலி

கும்பகோணம் மாநகர் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பள்ளி வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மெழுகுவத்தி ஏந்தி, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். அதேபோல் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் சாக்கோட்டை க. அன்பழகன் முன்னிலையில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினருமான கோ.வி. செழியன், (மு) நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், கும்பகோணம் திமுக மாநகர செயலாளர் மற்றும் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன். டி.வி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உயிரிழந்த குழந்தைகளை நினைவு கூர்ந்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, திமுக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்த குழந்தைகளின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர். கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்செய்தியாளர் அ.மகேஷ்

Must Read