தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் புதிய கிளை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 14 உறுப்பினர்களைக் கொண்ட புதிய கிளைக் குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வுக்கு மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் பா. சரண்யா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பி. தாமரைச்செல்வி சிறப்புரையாற்றி, மாதர் அமைப்புகளை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும், பெண்கள் சமூக முன்னேற்றத்தில் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் எடுத்துரைத்து பேசினார் தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜலட்சுமி பேசுகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விளக்கி, அவற்றை சட்டரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.கூட்டத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர்ராஜன் வழிநடத்தினார்.இதனைத் தொடர்ந்து, புதிய கிளைக்கான கிளைத் தலைவர், துணைத் தலைவர், கிளைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் கிளைப் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்நிகழ்ச்சியின் நிறைவில், புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அமைப்பின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

