Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்காரைக்காலில் விநாயகா மிஷின்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தொடக்கம்

காரைக்காலில் விநாயகா மிஷின்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தொடக்கம்

தொழிலாளர் முன்னேற்ற சங்க கொடியேற்றம் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

காரைக்காலில் விநாயகா மிஷின்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இன்று தொடங்கப்பட்டது.இதையொட்டி, காரைக்கால் கீழகாசாகுடிமேடு பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷின்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் கலந்து கொண்டு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அப்போது “தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாக. தியாகராஜன், சங்கத் தலைவர் குமார், செயலாளர் முருகேசன் உள்ளிட்ட விநாயகா மிஷின்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read