Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணத்தில் 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு பிரசாரம்

கும்பகோணத்தில் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணர்வு பிரசாரம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தமிழ்நாடு மாநிலக் கிளை சார்பில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ‘போதையில்லா தமிழகம்’ மாநில அளவிலான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் சாலை மற்றும் ஏ.ஆர்.ஆர். சாலையிலும் செவ்வாய்க்கிழமை மாலை கேரவன் மூலம் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.ஏ ஆர் ஆர் சாலை கூட்டத்திற்கு அப்துல் கலாம் ஆசாத் தலைமை வகித்தார். முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். செய்யது முபாரக் பிரச்சார கூட்டத்தை தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து எஸ். சாதிக் பாஷா சிறப்புரையாற்றி பேசுகையில்கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது, இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவது, போதைப் பழக்கத்தால் ஏற்படும் குடும்பச் சிதைவு, பொருளாதார பாதிப்பு மற்றும் சமூக சீர்கேடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார் மேலும், போதைக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மூலம் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.மது மற்றும் போதைப் பழக்கமில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு கருத்துகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read