உங்கள் எஸ்.பி.ஐ வங்கி கணக்கை வேறொரு கிளைக்கு மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது ரொம்ப சிம்பிள் நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் ஆன்லைனிலேயே எளிதாக மாற்றலாம். எஸ்.பி.ஐ-ன் அதிகாரப்பூர்வ YONO ஆப் மூலமாகவும் செய்யலாம்.
ஆன்லைனில் எஸ்.பி.ஐ வழியாக மாற்றுவது
- முதலில் எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்லவும். https://www.onlinesbi.sbi/personal/ பக்கத்திற்கு செல்லவும்.
- உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்டு லாக்கின் செய்யவும்.
- மேலே மெனு பாரில் “e-Services” டேப் கிளிக் செய்யவும்.
- “Transfer of Savings Account” என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
- உங்கள் எந்த அக்கவுண்டை மாற்ற வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.
- எந்த கிளைக்கு உங்கள் அக்கவுண்டை மாற்ற வேண்டுமோ அந்த கிளையின் branch code உள்ளிடவும்.
- தகவல்களை சரிபார்த்து “Submit” கொடுக்கவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
- அதை கொடுத்து “Confirm” கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு Acknowledgement மெசேஜ் அனுப்பபடும். YONO செயலி வழியாக மாற்றுவது
முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் YONO SBI செயலி டவுன்லோடு செய்யவும்.
- அடுத்து செயலி ஓபன்செய்து லாக்கின் செய்யவும்.
- “Services” ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.
- அடுத்து “Transfer of Savings Account” ஆப்ஷன் கொடுக்கவும்.
- இப்போது எந்த அக்கவுண்டை மாற்ற வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.
- எந்த கிளைக்கு உங்கள் அக்கவுண்டை மாற்ற வேண்டுமோ அந்த கிளையின் branch code உள்ளிடவும்.
- தகவல்களை சரிபார்த்து “Submit” கொடுக்கவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்
- ஓ.டி.பி உள்ளிட்டு “Confirm” கிளிக் செய்யவும்.
- உங்கள் கிளை மாற்ற பதிவு குறித்து உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பபடும்.

