இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் சென்னம்பட்டி கிராம மக்கள் சார்பாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இப்போட்டியை தமிழக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டினர் சார்பாக ரொக்கப்பரிசு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதூரில், நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Related Posts
Add A Comment


