Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு: ஆட்சியர் தகவல்
    இந்தியா

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு: ஆட்சியர் தகவல்

    SahabudeenBy SahabudeenAugust 28, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “HCL Techbee “Early Career Programme” மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவருக்கு சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியினை துவங்க HCL Technologies-ல் ஒரு வருடகால பயிற்சி அளித்து நிரந்தர வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைக்கழகத்தில் BCA பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் BCA/ BBA/B.Com., மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்தில் Integrated Management பட்டப்படிப்புகளில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.

    இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகளாக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022-23 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். HCL மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் ஒரு வருட பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.

    ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.17,000/- முதல் ரூ.22,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்டஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

    Post Views: 174
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.