Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » எங்கள் மகளுக்கு இனி நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ – கொல்கத்தா பெண் டாக்டரின் பெற்றோர் வேதனை
    இந்தியா

    எங்கள் மகளுக்கு இனி நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ – கொல்கத்தா பெண் டாக்டரின் பெற்றோர் வேதனை

    SahabudeenBy SahabudeenDecember 14, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கார்

    மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை கொல்கத்தா போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதன்படி விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். நிதி முறைகேடுகள் தொடர்பாக சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாகவும் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சீல்டா கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திகையை தாக்கல் செய்யாததால், இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தங்கள் மகளுக்கு இனி நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என உயிரிழந்த பெண் டாக்டரின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெண் டாக்டரின் தாயார் கூறுகையில், “சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று நினைத்தோம். ஆனால் தற்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அமைப்பு மொத்தமாக எங்களை கைவிடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்றார்.

    மேலும், “அதிகாரம் கொண்டவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதைப் போன்ற ஒரு வழக்காக இதுவும் மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். அதே போல், உயிரிழந்த பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், “நாங்கள் மனமுடைந்த நிலையில் இருக்கிறோம். நாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளை நம்பினோம்.

    ஆனால் எங்கள் மகளுக்கு இனி நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    Post Views: 149
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.