Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யலாம் சென்னை ஐகோர்ட்டு
    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யலாம் சென்னை ஐகோர்ட்டு

    SahabudeenBy SahabudeenJanuary 22, 20251 Comment1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், முன்னாள் முதல்-அமைச்சர் பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சேலம் நீதிமன்றத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம்இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

    இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், சேலம் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி போலீசார் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தலாம். விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

    Post Views: 212
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    View 1 Comment

    1 Comment

    1. subu on January 22, 2025 11:11 pm

      நல்லது

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.