நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்க முகாம் நடைபெற்றது. நாசரேத் அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி ஜெபதாஸ் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் குணசீலராஜ், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். முகாமில், பள்ளி மாணவர்களுக்கு, புதிதாக இந்திய அஞ்சலக வங்கி சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டன. மாணவர்கள், தங்களது சேமிப்பாக ரூபாய் 200 செலுத்தி புதிய கணக்குகளை தொடங்கிக் கொண்டனர். நாசரேத் அஞ்சல் அலுவலக பணியாளர்கள் அலெக்சாண்டர், மாடசாமி, சுப்புலட்சுமி, பெரில் ஆஸ்னாத் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பெயர் பதிவு செய்தல், புதிய கணக்கு துவங்குதல், சேமிப்புகளை வரவு வைத்தல் ஆகியவற்றை செய்து கொடுத்தனர். புதிதாக கணக்கு துவங்கிய மாணவர்களுக்கு, உடனடியாக, சேமிப்பு அட்டைகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் புதிய சேமிப்பு அட்டைகளை மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித்செலவசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


