Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை!
    மாவட்ட செய்திகள்

    பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை!

    SahabudeenBy SahabudeenMarch 14, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை வெளியிட வேண்டும் : என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்!!
    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தார்கள்.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் திமுக ஆட்சி நடக்கிறது.
    எனவே திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.
    இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட் என்பதால் இப்போதே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் தினமும் அரசுக்கு கோரிக்கை மனுவை தபால் அனுப்பி வருகின்றார்கள்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களை கற்று தருகின்றார்கள்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாய் உயர்த்தியதால் தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியம் பெறுகின்றனர்.ஆனால் 13 ஆண்டை கடந்து தற்போது 14வது ஆண்டிலும் தற்காலிகமாக பணிபுரிவதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.எனவே இதே பாடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களை போலவே, பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்தி காலமுறை சம்பளம் வழங்க நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.இதற்காக அரசு கொள்கை முடிவு எடுத்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும்.
    எனவே, முதல்வர் பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்.என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்தார் .
    படவிளக்கம்; ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்

    Post Views: 525
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.